புரட்டாசி மாதம் எதிரொலி கறிக்கோழி விற்பனை சரிவு

நாமக்கல் : ”புரட்டாசியால் கறிக்கோழி உற்பத்தி, 20 சதவீதமும், விற்பனை, 15 சதவீதமும் குறைந்தது,” என, பண்ணையாளர்கள் சம்மேளன துணை தலைவர் வாங்கிலி சுப்ரமணியம் தெரிவித்தார். தமிழகத்தில், பல்லடம், நாமக்கல், ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில், 25 ஆயிரம் கறிக்கோழி உற்பத்தி பண்ணைகளில், தினமும், 30 லட்சம் கிலோ கறிக்கோழிகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. புரட்டாசியில் மக்கள் விரதம் கடைப்பிடிப்பதால், நுகர்வு சரிந்து, கறிக்கோழி விலை குறைந்துள்ளது. தமிழ்நாடு முட்டைக்கோழி பண்ணையாளர்கள் சம்மேளன துணை தலைவர் வாங்கிலி சுப்ரமணியம் கூறியதாவது:புரட்டாசியை […]

Continue Reading